Flash News

aym shaik இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

HTML lessons

செவ்வாய், மே 28, 2013

ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி



ஆப்பிளைவிட சிறந்த பழம் பப்பாளி. இதில் ஆப்பிளில் உள்ளதைவிட அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. விலையும் மிகமலிவு. இதனால் இதை ஏழைகளின் ஆப்பிள் என்றே அழைக்கலாம். பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில் தான் உள்ளது. 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. ஆப்பிளைக் காட்டிலும் இனிப்பான பழம் பப்பாளி. பப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியமாக வாழலாம். பப்பாளியை நாம் எந்தக் காலத்திலும் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இது ஒரு திகட்டாத பழம் என்பதால், நாம் அளவுக்கதிகமாக சாப்பிட்டு விடுவோம். அப்பொழுதுதான் பிரச்னை. அளவோடு சாப்பிடும் வரை இது அபூர்வமான பழம்.முகெலும்பு பிதுக்கம் அல்ல நழுவல் காரணமாக வரும் கடுமயான வலிக்கு பப்பாளியில் உள்ள 'கமோ பாப்பன்' என்ற கெமிக்கல் நல்ல குணமளிப்பதாக அமெரிக்காவில் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.பொவாகவே பப்பாளி தலைமுடி, சருமம், கண்பார்வை, தொண்டை, வயிறு, சிறுநீரகம் அனைத்துக்கும் மிகவும் ஏற்றது. எக்காரணத்தைக் கொண்டும் பப்பாளியை நாம் தவிர்த்தால், நம் ஆரோக்கியத்தை நாம் தவிர்க்கிறோம் என்றுதான் அர்த்தம்.''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக